Responsive Ad

உலகையே மிரளவைக்க வரும் பாகுபலி பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்"

 
      பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. உதாரணமாக நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவிளையாடல்களை சித்தரித்து பக்தி படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பத்மாவத் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலில் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது.

       
ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையும் படமாகி வருகிறது. இதில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படம் தயாராகிறது.



Post a Comment

0 Comments